முகப்பு
தற்போதைய செய்திகள்

காட்டுமன்னார்கோயில் அருகே வாலிபர் தீவைத்து எரித்து கொலை: கருகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருமூலஸ்தானம் கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முனீஸ்வரன் கோயில் அருகே உள்ள பாசன வாய்க்காலில் தீவைத்து எரிந்து நிலையில் ஒருவரது சடலம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:43 PM
பகிர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே தீவைத்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். கருகிய நிலையில் அவரது சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருமூலஸ்தானம் கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முனீஸ்வரன் கோயில் அருகே உள்ள பாசன வாய்க்காலில் தீவைத்து எரிந்து நிலையில் ஒருவரது சடலம் கிடப்பதை ஆடு மேய்க்கும் ஒருவர் பார்த்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிராம மக்கள் காட்டுமன்னார்கோயில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆசைதம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். வாலிபர் தீவைத்து இறந்து கிடந்த இடத்தின் அருகே பீர்பாட்டில்கள், காலணிகள் கிடந்தது. விழுப்புரத்திலிருந்து தடயஅறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இறந்த போன வாலிபர் 3 தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டு, தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →