விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியதில் முறைகேடு:தொடக்க வேளான்மை வங்கி செயலர் தற்காலிக பணி நீக்கம்
திருவாருர் மாவட்டம் தில்லை வளாகத்தில் வழங்கப்பட்ட வளர்ச்சி நிவாரண தொகையில் ஊழல் செய்ததாக தில்லை வளாகம் தொடக்க வேளாண்மை வங்கியன் செயலாளர் ராமமூர்த்தியை கூட்டுறவு சங்க தலைவர்
திருத்துறைப்பூண்டி அருகே விவசாயிகளுக்கு வறட்சி நிவாறணம் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தொடக்கவேலாண்மை கூட்டுறவு வங்கி செயலர் இன்று பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் கிராமத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக ஏற்பட்ட இழப்பிற்காக விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்கிய பயிர்நிவாரண இழப்பீட்டுத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து வங்கியின் செயலர் ராமமூரத்தியை மனனார்குடி சரக கூட்டுறவு துணை பதிவாளர் சுபாஷினி பரிந்துரையின் பேரில், தில்லைவிளாகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிதலைவர் எஸ்.பெரியபெருமாள் பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதே புகார் தொடர்பாக கடந்த சில தினங்ளுக்கு முன்பாக தில்லைவிளாகம் கிராமநிர்வாகஅலுவலர் பக்கிரிசாமி மற்றும் கிராமப்பணியாளர்கள் உள்ளிட்ட மூவர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 13 ஆண்டுலுக்கு பிறகு கூட்டுறழு தேர்த்ல நடைபெற்றநிலையில், வங்கியின் இயக்குனர்குழு தேர்நடெடுக்கப்பட்டு பதவிக்கு வன்த பினனர் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக வங்கிஊழியர் முதல் பணிஇடைநீக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.