குற்றாலம் பேரருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நீர் வரத்து அதிகரித்திருந்த நிலையில் அபாய அளவைத் தாண்டி நீர் கொட்டியதால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் இன்று காலை 6 மணி முதல் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இந்நிலையில், மதியம் 2 மணி முதல் நீர் கொட்டியதால், மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் ஐந்தருவியிலும் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. எனவே, பயணிகள் குளிக்க, மதியம் 2.30 மணி முதல் தடை விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.