தற்போதைய செய்திகள்

விருதுநகர்-மானாமதுரை அகல ரயில்பாதையில் வருகிற 14-ம் தேதி ரயில் போக்குவரத்து துவக்கம்

விருதுநகர்-மானாமதுரை அகல ரயில்பாதை அமைக்கும் பணி முடிந்து, ரயில்வே துறை அதிகாரிகளால் அனைத்துச் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. அதோடு, இடையிடைய அமைக்கப்பட்டுள்ள ரயில்

எஸ். பாண்டியன்

விருதுநகர்-மானாமதுரை அகல ரயில்பாதையில் வருகிற 14-ம் தேதி கன்னியாகுமரி-புதுச்சேரி வாராந்திர விரைவு பயணிகள் ரயிலை அருப்புக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மத்திய விமானத் துறை இணையமைச்சர் கே.சி.வேணுகோபால் தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: விருதுநகர்-மானாமதுரை அகல ரயில்பாதை அமைக்கும் பணி முடிந்து, ரயில்வே துறை அதிகாரிகளால் அனைத்துச் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. அதோடு, இடையிடைய அமைக்கப்பட்டுள்ள ரயில் கிராசிங்குகள், பாலங்களின் கட்டுமான பணிகளும் முடிந்துள்ளது. இக்குறிப்பிட்ட அகலப்பாதை வழித்தடத்தில் இயந்திரத்தோடு, மூன்று பெட்டிகள் இணைப்புகளுடன் 40 கி.மீ மற்றும் 110 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில், 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருப்பதாக ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அகல ரயில்பாதையில் புதுச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புதிய வாராந்திர விரைவு ரயிலை அருப்புக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நாளில் மத்திய விமான துறை இணை அமைச்சர் கே.சி.வேணுகோபால் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ரயில்வே உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள் பொதுமக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT