தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலுவையில் உள்ள தணிக்கை தொகை ரூ.3 கோடியை வசூலிக்க கோரிக்கை
தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் நிலுவையில் உள்ள தணிக்கை தடைகளுக்கான தொகை ரூ.3 கோடியை வசூலிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு
தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் நிலுவையில் உள்ள தணிக்கை தடைகளுக்கான தொகை ரூ.3 கோடியை வசூலிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.
புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் ரா.செயபாலன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள் எண்னிக்கை குறித்தும், அவற்றில் அக்டோபர் 2012 வரை உள்ள மொத்த தணிக்கை தடை எண்ணிக்கையும், தடைக்கான தொகை எவ்வளவு என கோரியிருந்தார்.
அதனடிப்படையில் பொதுதகவல் அதிகாரியும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்வி இயக்கக உதவி இயக்குநருமான மூ.ஜெகதீசன் தெரிவித்துள்ள பதிலில் 'தமிழ்நாட்டில் மொத்தம் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாகவும், மொத்த தணிக்கை தடை 1283 என்றும், தணிக்கை தடைகளால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.3,07,12386.51 (ரூ.3 கோடி)' என பதில் தெரிவித்துள்ளார். எனவே மேற்கண்ட தணிக்கை தடைகளுக்கான தொகை ரூ.3 கோடியை வசூலிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவைத் தலைவர் ரா.செயபாலன் கடிதம் அனுப்பியுள்ளார்.