தற்போதைய செய்திகள்

அழகிரியை சந்தித்த ஜி.கே.வாசன்: மீண்டும் தமாகா உதயமாகுமா?

மதுரையில் இன்று காலை உத்தரகாண்ட் விமான விபத்தில் இறந்துபோன பைலட் பிரவீன் வீட்டிற்கு ஆறுதல் சொல்வதற்காக வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன்  முன்னாள் மத்திய

ஜெயப்பாண்டி

மதுரையில் இன்று காலை உத்தரகாண்ட் விமான விபத்தில் இறந்துபோன பைலட் பிரவீன் வீட்டிற்கு ஆறுதல் சொல்வதற்காக வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன்  முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை சந்தித்து பேசினார். இந்த பேச்சு வார்த்தை சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. இதன்பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்களை வாசன் சந்தித்து பேசினார்.

பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரே நாளில் இரண்டு தலைவர்கள் கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேசியது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2002 ஆம் ஆண்டு மதுரையில் வைத்து காங்கிரஸ் கட்சியுடன் தமாகாவை இணைத்தார் ஜி.கே.வாசன். ஆனால் தமாகா மீண்டும் உதயமாகாது என்று கூறிவரும் ஜி.கே.வாசன் இன்று மதுரையில் காங்கிரஸ் அதிருப்தியாளர்களை சந்தித்தது மீண்டும் தமாகா உதயாமாகுமா என்ற கேள்வியை தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT