மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 150 ஆண்டுகளாக இருந்த பழைய கொடிமரம் மாற்றப்பட்டு, புதிதாக கொடிமரம் ரூ. 5 கோடி செலவில் கோயில் சார்பில் அளிக்கப்பட்ட தங்கம் பூசப்பட்டு, அமைக்கப்பட்டது. சுவாமி சந்நிதி முன்பு கம்பத்தடி மண்டபத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கொடிமரத்துக்கான சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நேற்று தொடங்கின. பின்னர் இன்று காலை அதற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், அறநிலையத் துறை ஆணையர், அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், இந்தக் கொடிமரத்தில் முதன் முதலாக ஆடி உற்ஸவ விழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.