எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சப்போவதிலலை : விஜயகாந்த்
என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ரிஷிவந்திரம் தொகுதிக்கு உட்பட்ட பகந்தை கூட்ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலவலகத்தை திறந்து வைத்தார் விஜயகாந்த்.
அதன்பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, விஜயகாந்த் கூறியது, இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. மக்களின் அடிப்படை பிரச்னைகளை போக்குவதற்கு அரசு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. தேர்தலை மையப்படுத்தியே உணவுப் பாதுகாப்பு திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் கடை நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக தண்ணீரை இன்று காசுக்காக விற்பனை செய்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ரூபத்திலாவது ஆட்சி மாற்றம் நடந்தே தீரும். அதன் அடிப்படையில் தமிழகத்திலும் ஒரு மாற்றம் ஏற்படும் என்றார்.