வலுக்கட்டயமாக நத்தம்காலனி வீட்டில் விடப்பட்ட இளவரசன் பெற்றோர்
தருமபுரி அரசு மருத்துவமனையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், வழக்குரைஞர்கள், இளவரசனின் பெற்றோர் ஆகியோர். ஆனால், கா
தருமபுரி அரசு மருத்துவமனையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், வழக்குரைஞர்கள், இளவரசனின் பெற்றோர் ஆகியோர். ஆனால், காவல் நிலையத்துக்குள் இளவரசன் பெற்றோர் வர மறுத்தனர். அவர்களுக்கும் மற்றவர்களும் காவல் நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் வெளியே விட்டுவிடுங்கள் என்று காவல் அதிகாரி சொல்லியும் இருவரும் ஒத்துழைக்கவில்லை. எனவே, வலுக்காட்டாயமாக இழுத்துச் சென்று நத்தம்காலனி வீட்டிலேயே இறக்கி விட்டனர்.
இதனைப் படம் பிடிக்க பத்திரிகை புகைப்படக் காரர்களை காவல் நிலையத்துக்குள் செல்ல விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.