முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கைக் கடற்படை அத்துமீறல்: நாகை, நாகூர் மீனவர்களின் மீன்பிடி வலைகள் பறிப்பு

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ரா. முத்துலெட்சுமி என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகும், நாகூர் பகுதியைச் சேர்ந்த அ. சக்திவேல், கு. அப்பாதுரை ஆகியோருக்குச் சொந்தமான மீன்பிடி படகுகளும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:47 PM
பகிர்:

இந்திய கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, நாகூர் மீனவர்களின் மீன்பிடி வலைகளை, இலங்கைக் கடற்படையினர் பறித்துச் சென்றது இன்று தெரியவந்தது.

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ரா. முத்துலெட்சுமி என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகும், நாகூர் பகுதியைச் சேர்ந்த அ. சக்திவேல், கு. அப்பாதுரை ஆகியோருக்குச் சொந்தமான மீன்பிடி படகுகளும் கடந்த 11-ம் தேதி, நாகை மாவட்டம், காமேஸ்வரத்துக்குக் கிழக்கே கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.அப்போது, அங்கு 15  படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் நாகை, நாகூர் மீனவர்களின் 3 படகுகளையும் சுற்றி வளைத்து, அவர்கள் கடலில் வீசியிருந்த மீன்பிடி வலைகளை அறுத்து, பறித்துக் கொண்டுச் சென்றுள்ளனர்.

இந்த வலைகளின் மதிப்பு சுமார் ரூ. 40 லட்சம் என மதிப்பிடப்படுகிறது.மீன்பிடி வலைகளை பறிகொடுத்த 3 மீன்பிடி படகுகளும் இன்று காலை கரைக்குத் திரும்பிய பின்னரே இந்த வலைப் பறிப்புச் சம்பவம் மற்ற மீனவர்களுக்குத் தெரியவந்தது.

இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில்,  நாகை தாலூகா மீனவர்கள் கூட்டம் அக்கரைப்பேட்டையில் இன்று நடைபெற்றது.நாகூர் மேலத்தெரு, நாகூர் ஆர்யநாட்டுத் தெரு, சாமந்தான்பேட்டை, நம்பியார் நகர், ஆர்யநாட்டுத் தெரு, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், மீனவர்களின் உடமைகளை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த இலங்கை கடற்படைக்குக் கண்டனம் தெரிவிப்பது. மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கத் தவறிய மத்திய அரசுக்கும்,  இந்தியக் கடற்படைக்கும் கண்டனம் தெரிவிப்பது.மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை தாலூகா மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது.நாகை தாலூகா கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களிடையே விளக்கி ஆதரவு கோருவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →