மழை வேண்டி திருஞான சம்பந்தர் பதிகங்கள் படித்த இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர்
சிதம்பரம் நகரில் உள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை தூர் வாரக்கோரியும், மழை வேண்டியும் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபடுவது என இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் முடிவு
மழை வேண்டி சிதம்பரத்தில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் திருஞானசம்பந்தர், சுந்தரர் பதிகங்களில் அதற்கான பாடல்களை இன்று மாலை படித்தனர்.
சிதம்பரம் நகரில் உள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை தூர் வாரக்கோரியும், மழை வேண்டியும் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபடுவது என இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் முடிவு எடுத்து, மழை வேண்டி அனைவரும் வருகிற ஜூலை 12-ம் தேதி திருஞானசம்பந்தர், சுந்தரர் பதிகங்களில் உள்ள அதற்குண்டான பாடலை படிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து சனிக்கிழமை மாலை சிதம்பரம் தேரடிகடைத்தெருவில் திருஞானசம்பந்தம், சுந்நதர் பதிகங்களை ஆலய பாதுகாப்புக்குழுவினர் அதன் தலைவர் எம்.செங்குட்டுவன் தலைமையில் கூட்டாக அமர்ந்து படித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் ஜோதிகுருவாயூரப்பன், நிர்வாகிகள் பொருளாளர் ராம.சபேசன், சங்கரமூர்த்தி, பாலகிருஷ்ணன், நாச்சியப்பன். குருமூர்த்தி, பாரதிய யுவ பரிஷத் தலைவர் ரவி, சரவணன், தண்டாபாணி, சந்திரசேகரன், செல்வி, முத்துகணேசன், லெட்சுமிகாந்தி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.