லால்குடி அருகே கோயிலில் விக்ரமாதித்தன் கால நாணயங்கள் கண்டெடுப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பழங்கால கோயிலில் விக்ரமாதித்தன் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பழங்கால கோயிலில் விக்ரமாதித்தன் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
லால்குடி அருகே திருமணமேடு என்ற கிராமத்தில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோயில் திருப்பணிக்காக மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய இடங்களில் தோண்டியபோது, விக்ரமாதித்தன் கால நாணயங்கள் 33-க்கு மேல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 3 மணிக்கே இது கண்டெடுக்கப்பட்ட போதிலும், இதுகுறித்த தகவலை யாரும் தாசில்தாருக்கு தெரிவிக்கவில்லையாம். எனவே, இன்று காலை தகவல் கிடைத்தவுடன், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து புதையல் உள்ளிட்டவை ஏதேனும் உள்ளதா என்று விசாரணை நடத்தினர்.