தற்போதைய செய்திகள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் நலனுக்கு எதிரான அரசாணை 720ஐ ரத்து செய்ய கோரிக்கை

விருதுநகர் பெரியசாமி-தங்கம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு

எஸ். பாண்டியன்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எதிரான அரசாணை எண் 720ஐ ரத்து செய்ய வேண்டும் என அச்சங்கத்தின் மாநில தலைவர் ஜி.சுப்பையா தெரிவித்தார்.

விருதுநகர் பெரியசாமி-தங்கம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி  ஆசிரியர் கழகத்தின் மாநில செயலாளர் ஜி.சுப்பையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் நடந்த கலந்தாய்வு வெளிப்படையாக நடத்தப்பட்டது. இதற்காக  அரசுக்கும், அத்துறையின் அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், இதுவரையில் இல்லாத வகையில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து குறைகளையும் கேட்டறிந்தனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல், பட்டதாரி ஆசிரியர்கள் மேல் நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்தி அனுபவம் பெறாமலே, மாவட்ட கல்வி அதிகாரிகளாகவும், முதன்மைக் கல்வி அதிகாரிகளாகவும் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அதையடுத்து, அவர்களின் உத்தரவுக்கு முதுகலை ஆசிரியர்கள் கட்டுப்பட வேண்டியிருக்கிறது. எனவே முரன்பாடுகளை ஏற்படுத்தும் அரசாணை எண் 720 ஐ ரத்து செய்ய வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியம் பெறுவதில் வேறுபாடு நிறைய உள்ளதை களைய வேண்டும். இதற்காக நியமனம் செய்த குழுவின் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.

புதிதாக ஆசிரியர்கள் பணிநியமனத்தின் போது சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்படுகிறது. ஆனால் அதை மறுபடியும் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில், கல்லூரி சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு விரைவில் அனுப்பி விடுகின்றனர். ஆனால், ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து சரிபார்த்து வருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.  இதுபோன்ற காரணங்களால் ஆசிரியர்கள் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் எடுக்க முடியாமலும், ஊதிய உயர்வும் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களது பதவி பெயரை விரிவுரையாளர் என்றும், உதவி தலைமையாசிரியரை துணை முதல்வர் என்றும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை முதல்வர் என்றும் மாற்றம் செய்ய வேண்டும் என மாநில செயலாளர் ஜி.சுப்பையா தெரிவித்தார். அப்போது உடன் மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார், மாநில பொருளாளர் வள்ளிவேலு, அமைப்பு செயலாளர் பூபாலன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT