மதுரையில், வயதான தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுரை கொதிக்குளம் பகுதியில் வசிப்பர் நடராஜன் (68). இவர் ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஆவார். இவரது மனைவி நாகரத்தினம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை நடந்திருப்பதால், இவரால் நடக்க முடியாது.
வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் கதவை சாத்திவிட்டு தாழ்ப்பாள் போடாமல் தூங்கிய போது, நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் வந்து, போர்வையால் இருவரையும் கட்டிப்போட்டுவிட்டு, நாகரத்தினத்தின் தாலி, வளையல், தோடு மற்றும், பீரோவில் இருந்து 30 பவுன் நகை, 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.