தற்போதைய செய்திகள்

கூட்டுறவு பண்டகசாலையின் தலைவர் தேர்தலில் வாக்கு பெட்டியை அதிமுகவினர் தூக்கி தப்பியோட்டம்

விருதுநகரில் மொத்த கூட்டுறவு பண்டகசாலையின் தலைவர் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போதே அதிமுகவைச் சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் போலீஸார் கண் முன்பே தூக்கிச் சென்றனர். இதனால் மறு

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மொத்த கூட்டுறவு பண்டகசாலையின் தலைவர் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போதே அதிமுகவைச் சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் போலீஸார் கண் முன்பே தூக்கிச் சென்றனர். இதனால் மறு தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. ஏற்கனவே இந்த பண்டகசாலையின் 21 உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்களித்து தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான தேர்தல் முறையாக தேர்தல் அதிகாரி பிரேம்லால் மூலம் அறிவிக்கப்பட்டது. அதன் வேட்பு மனுத்தாக்கல் காலை 10 மணி முதல் 11 மணி வரையில் நடைபெற்றது. அதையடுத்து, 11 மணி முதல் 11.30 வரையில் வேட்பு மனு பரிசீலனையும், 11.45 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடவும், 11.45 முதல் 12.15 மணி வரையில் வேட்பு மனு திரும்ப பெறவும், 12.30 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியலும், 12.30 மணி முதல் 1 மணிக்குள் வாக்கு பதிவுக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூலம் மாவட்ட இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவரை எதிர்த்து முன்னாள் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் பாசறையின் செயலாளர் தினேஷ்பாபுவின் மனைவியான கனிமொழி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதையடுத்து, இருதரப்பினரும் அதிமுகவினர் கட்சியினர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திரும்ப பெற முடியாது என உறுதியாக கூறியதை அடுத்து தேர்தல் 12.45 மணிக்கு பண்டக மேலாளர் அறையில் வாக்கு பெட்டி வைத்து தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில், மூன்று பேர் வரையில் வாக்களித்திருந்தனர்.

அப்போது, வேட்பாளர்கள் 1 மணிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என கூறி தேர்தல் அதிகாரி பிரேம்லாலுடன் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிமுகவைச் சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் பண்டக சாலைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அதில், ஒருவர் மட்டும் மேலாளர் அறையில் வாக்குச் சீட்டுக்களை கிழித்து போட்டு விட்டு, அங்கிருந்த வாக்கு பெட்டியை தூக்கிக் கொண்டு அருப்புக்கோட்டை சாலையில் தப்பியோடினார்கள். அப்போது, காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வாகனங்கள் அதிகளவில் வந்து கொண்டிருந்ததால் துரத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து தேர்தல் அதிகாரி பிரேம்லால் கூறியாதவது: தேர்தல் விதிமுறைப்படி சரியான நேரத்திற்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, சுமார் 1.10 மணிக்கு வாக்கு பதிவு பெட்டி வைக்கும் அறையில் புகுந்து சீட்டுக்களை கிழித்தும், வாக்கு பெட்டியையும் தூக்கிக் கொண்டு அருப்புக்கோட்டை சாலையில் தப்பியோடினார்கள். அதிகளவு வாகனங்களும், பொதுமக்களின் நடமாட்டமும் இருந்தது. அதனால், இன்று நடைபெற இருந்த தேர்தல் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT