திருத்துறைப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் : எம்எல்ஏ உட்பட 500 பேர் கைது
திருத்துறைப்பூண்டியில் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டியில் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
விவசாய தொழிலாளர்களுக்கு தேசிய அளவில் ஒருங்கணைந்த கூலிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும், 15 சென்ட் இலவச நிலம் வழங்கக் கோரியும், வறட்சி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு மாதம் 30 கிலோ இலவச அரிசி வழங்கக் கோரியும் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் கோ. பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. உலகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 200 பெண்கள் உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.