சிதம்பரத்தில் தீவிபத்து: 4 வீடுகள் எரிந்து சேதம்
சி.கொத்தங்குடித்தெரு பெரியத்தெருவில் வசிக்கும் சேட்டு என்பவரது வீட்டில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. அப்போது வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் அருகாமையில் இருந்த கஜேந்திரி, மாலா, சுமதி
சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் சி.கொத்தங்குடிதோப்பு பெரியத்தெருவில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதமுற்றன.
சி.கொத்தங்குடித்தெரு பெரியத்தெருவில் வசிக்கும் சேட்டு என்பவரது வீட்டில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. அப்போது வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் அருகாமையில் இருந்த கஜேந்திரி, மாலா, சுமதி ஆகியோரது வீடுகளுக்கு தீப்பரவி எரிந்து சேதமுற்றன. கஜேந்திரி என்பவரது வீட்டிலிருந்து ஆடு, கோழி, நாய்க்குட்டி ஆகியவை தீயில் எரிந்து கருகின. தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று மேலும் தீப்பரவாமல் தடுத்து அணைத்தனர். தீவிபத்தில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமுற்றன.