மதுரை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் இருவர் கைது
கடந்த ஜூலை 11ம் தேதி தூத்துக்குடிக்கு பள்ளிச் சுற்றுலா சென்றபோது, கடலில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி, பெற்றோர் இன்று பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், பள்ளியின் முதல்வர் மாறன் கைது செய்யப்பட்டார். மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் கார்த்திக், ஹரிக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பள்ளியின் அங்கீகார ரத்து குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அளித்தனர். அதற்கு இரு நாட்களுக்குள் பதில் அளிக்கத் தவறினால் அங்கீகார ரத்துக்கு சிபாரிசு செய்வோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.