பெங்களூரு இளைஞர் வேளாங்கண்ணியில் தற்கொலை
நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளைஞர், விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளைஞர், விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு ஐ.டி காலணியைச் சேர்ந்த மூர்த்தி மகன் ரகு (21). இவர், கடந்த 17-ம் தேதி வேளாங்கண்ணி வந்து, ஓர் தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார்.
வியாழக்கிழமை மாலை நீண்ட நேரமாகியும் அவரது அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், வேளாங்கண்ணி போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
வேளாங்கண்ணி போலீஸார், விடுதி ஊழியர்களின் உதவியுடன் அறைக் கதவை உடைத்துத் திறந்த போது, ரகு அறையினுள் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.