விருதுநகர் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை 4441 பேர் பங்கேற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்வெழுத இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வு அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட இருக்கிறது. அந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் விருதுநகர் பகுதியில் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கேவிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹாஜிபி மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டையில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எச்.என்.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல் எஸ்.என்.பி.மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் தேர்வு மையங்களில் 4441 பேர் பங்கேற்று தேர்வு எழுத இருக்கிறார்கள்.
எனவே இந்த மையங்களில் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்கவுள்ளோர் தேர்வுக் கூடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்து விடவேண்டும். மேலும், தேர்வுக்கு தேவையான பொருள்களை தவிர மற்ற கைபேசி, பேஜர் உள்ளிட்ட நவீன கருவிகளை தேர்வறைக்குள் கொண்டு வர அனுமதியில்லையென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.