முகப்பு
தற்போதைய செய்திகள்

 மானாமதுரையில்  பஸ் ஏற நின்றவரிடம் குடிபோதையில் தகறாறு செய்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த சனிக்கிழமை பஸ் ஏற நின்றவரிடம் குடி போதையில் தகறாறு செய்த அரசு பள்ளி தலைமையாசிரியரை டி.எஸ்.பி வெள்ளத்துரை உத்தரவின்பேரில் போலீசார் கைது செய்தனர். மானாமதுரை ரயில்வே காலணி ஜீவா நகரில் வசிப்பவர் மதியழகன்(46) இவர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:45 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த சனிக்கிழமை பஸ் ஏற நின்றவரிடம் குடி போதையில் தகறாறு செய்த அரசு பள்ளி தலைமையாசிரியரை டி.எஸ்.பி வெள்ளத்துரை உத்தரவின்பேரில் போலீசார் கைது செய்தனர். மானாமதுரை ரயில்வே காலணி ஜீவா நகரில் வசிப்பவர் மதியழகன்(46) இவர் அருகேயுள்ள கீழக்கொம்புக்காரனேந்தல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக வேலை பார்த்து வருகிறார். மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் இங்குள்ள மூங்கில்ஊரணி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த தலைமையாசிரியர் மதியழகன் கண்ணனிடம் தகறாறில் ஈடுபட்டார். இதையடுத்து கண்ணன் அருகேயுள்ள போலீஸ் டி.எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்று டி.எஸ்.பி வெள்ளத்துரையிடம் புகார் செய்தார். இவரது உத்தரவின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து மதியழகனை கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.