அழகர்கோயில் தேரோட்டம் : பல்லாயிரக் கணக்கானோர் சுவாமி தரிசனம்
108 திவ்ய தேசங்களில் 62வது திவ்ய தேசமாகவும், தென்திருப்பதியாகவும் போற்றப்படும் அழகர் கோயிலில் ஆடி திருத்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது
108 திவ்ய தேசங்களில் 62வது திவ்ய தேசமாகவும், தென்திருப்பதியாகவும் போற்றப்படும் அழகர் கோயிலில் ஆடி திருத்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது
தென்மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் தேரோட்டத்தைக் காண திரண்டிருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, காலை 6.30 மணியளவில் தேரில் எழுந்தருளினார்.
ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேர் 10.25 மணிக்கு புறப்பாடானது. தேரோடும் வீதியில் வலம் வந்த தேர் 11 மணியளவில் நிலைக்கு வந்தது.
தேரில் எழுந்தருளியிருந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு தரிசித்தனர்.