முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பாஜகவினர் மறியல்: 19 பேர் கைது

தமிழக பா.ஜா.க பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பாஜகவினர் இன்று பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் சிதம்பரம் நகரில் கடைகள் அனைத்தும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:54 PM
பகிர்:

தமிழக பா.ஜ.க பொதுச்செயலர் ஆடிட்டர் வி. ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்யக்கோரி சிதம்பரத்தில் இன்று மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக பா.ஜா.க பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பாஜகவினர் இன்று பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் சிதம்பரம் நகரில் கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. மேலும் சிதம்பரம் வடக்குமெயின்ரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.ஸ்ரீதரன் தலைமையில் நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் நிர்வாகிகள் ஜோதிகுருவாயூரப்பன், பாலகிருஷ்ணன், சீனுவாசன், பழனிராஜா, திருமாறன், ஆடிட்டர்கள் பாலசுப்பிரமணியன், விஸ்வநாதன், பாலரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 19 பேரை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் கைது செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →