வெறிச்சோடிய நிலையில் முக்கடல் சங்கமம்: சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
தமிழக பா.ஜ.க பொது செயலர் வி.ரமேஷ் கொலைச் சம்பவத்தை கண்டித்து அக்கட்சியினர் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
பாஜக நடத்திய பந்த் காரணமாக திங்கள்கிழமை கன்னியாகுமரியில் இயல்பு நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
தமிழக பா.ஜ.க பொது செயலர் வி.ரமேஷ் கொலைச் சம்பவத்தை கண்டித்து அக்கட்சியினர் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்நிலையில் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வழக்கம் போல் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. இதனால் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ஆனால் சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தை விட குறைந்து காணப்பட்டது. முக்கடல் சங்கமம், சன்னதி தெரு, காந்தி மண்டப சாலை உள்ளிட்ட முக்கிய இடங்கள் வெறிச்சோடி காணப் பட்டது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ரயில் நிலையம், பஸ் நிலையம், விவேகானந்தபுரம், கொட்டாரம், சுசீந்திரம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.