முகப்பு
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு

அரியலூர் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:55 PM
பகிர்:

அரியலூர் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

தஞ்சாவூர் ராஜப்பா நகர், செங்காட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து  மகன் அண்ணாதுரை (20). அதே பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (23). இருவரும்,  அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூருக்கு சென்றுகொண்டிருந்தனர். அரியலூர் அருகேயுள்ள மருதையாற்று பாலம் அருகே சென்றபோது, நிலைதடுமாறி இருவரும் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் திங்கள்கிழமை விழுந்தனர்.

இதில் பலத்த காயமடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காயமடைந்த கனகராஜ், அரியலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரியலூர் காவல் நிலையத்தில் முத்து அளித்த புகாரின்பேரில், ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →