முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் கோயிலை சுற்றி ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுவதால் கோயில் ஸ்திரதன்மை பாதிக்கும்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பல ஆயிரம் அடி ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுவதால் கோயிலின் ஸ்திரத்தன்மை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆழ்துளை

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:56 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பல ஆயிரம் அடி ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுவதால் கோயிலின் ஸ்திரத்தன்மை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஊழல் எதி்ர்ப்பு இயக்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் வழக்குறைஞர் அ.குணசேகரன் ஆகியோருக்கு முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்: தமிழகத்தில் பழமையான கோயிலில் ஒன்றாக சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் திகழ்கிறது. இக்கோயில் சமீபத்தில் தமிழகஅரசு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்கோயிலின் நான்கு புறமும் உள்ள கோபுரங்களில் நமது பண்பாட்டிற்குரிய பழமையான சிற்பங்கள் உள்ளன. தற்போது இக்கோயிலைச் சுற்றி மதில்சுவரை ஒட்டி அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகளும் கட்டப்பட்டு, அதற்கு தேவையான நீருக்கு பல ஆயிரம் அடியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் கோயிலை சுற்றி உள்ள மண்ணின் தாங்கும் சக்தி வலுவிழந்துவிட்டது. இதனால் கோபுரங்கள் மற்றும் கோயிலின் ஸ்திரதன்மை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ள தமிழக முதல்வர் கோயிலை சுற்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீரை உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியருக்கும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் உத்திரவிட வேண்டும் என கடிதத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →