குழவிக்கல்லை தலையில் போட்டு கணவர் கொலை: மனைவி கைது
காட்டுமன்னார்கோயில் அருகே திருச்சன்னபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரதன் (45). கூலித் தொழிலாளியான இவரது மனைவி பெயர் உஷாராணி (40). இவருகளுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள், 2
காட்டுமன்னார்கோயில் அருகே குழவிக்கல்லை தலையில் போட்டு கணவரை கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே திருச்சன்னபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரதன் (45). கூலித் தொழிலாளியான இவரது மனைவி பெயர் உஷாராணி (40). இவருகளுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். பரதன் குடும்பத்துடன் காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டை ரோட்டில் வசித்து வருகிறார். வேலூர் மாவட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்ற பரதன் செவ்வாய்க்கிழமை ஊர் திரும்பினார்.
இந்நிலையில் புதன்கிழமை கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மனைவி உஷாராணி வீட்டிலிருந்து குழவிக்கல்லை எடுத்து பரதன் தலையில் போட்டதாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரதன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து மனைவி உஷாராணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.