முகப்பு
தற்போதைய செய்திகள்

ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல் : மேலூர் ரேஷன் கடைகள் மூடல்

ரேஷன் கடை ஊழியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மேலூர் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:57 PM
பகிர்:

ரேஷன் கடை ஊழியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மேலூர் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

மேலூரில் ரேஷன் கடை ஊழியர் ஒருவரை மாவட்ட இணைப் பதிவாளர் புதன்கிழமை தாக்கினார்.  ரேஷன் கடை ஊழியரை தாக்கிய மாவட்ட இணைப் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாழக்கிழமை மேலூர் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டிருந்தன.

ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் இணைப் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டதை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை மாவட்ட அளவில் கொண்டு செல்லவும் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், கூட்டுறவு மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும், ரேஷன் கடை சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் மேலூர் மார்க்கெட்டிங் சொசைட்டியின் பணியாளர் சங்க நிர்வாகிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →