கூலித்தொழிலாளி அடித்துக்கொலை
பெரம்பலூர் அருகே தகராறில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே தகராறில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே உள்ள, கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் மகன் சின்னையன் (50) கூலித்தொழிலாளியான இவர், கடந்த 21ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த சுந்தரத்திற்கு சொந்தமான இடத்தில் கருவேல் முள் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம், தனது மனைவி சின்னப்பொன்னு, அவர்களது மகன் அன்பழகன் மற்றும் சிலருடன் சேர்ந்து சின்னையனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சின்னையன் பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சின்னையன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து சின்னையன் மனைவி பொன்னம்மாள் (48) அளித்த புகாரின்பேரில், பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரெத்தினசாமி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.