முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட பாஜக கோரிக்கை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்: தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி இன்று வரை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் விளைவாக

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:58 PM
பகிர்:

மேட்டூரிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு உடனடியாக நீர் திறந்து விட வேண்டும் என பாஜக தேசிய கவுன்சில் உறுப்பினரும், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைத் தலைவருமான கே.வி.கண்ணன்பிள்ளை தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்: தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி இன்று வரை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் விளைவாக கிருஷ்ணராஜசாகர், கபிணி அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டுருக்கு வெளியேற்றப்படுகிறது. கர்நாடகஅரசு வழக்கம் போல் தங்களது அணைகளை நிரப்பி கொண்டு இந்த ஆண்டு தமிழகத்தை வடிகாலாக பயன்படுத்துகிறது. இன்று மதியம் நிலவரப்படி மேட்டூர் அணை 85 அடியை எட்டியுள்ளது. நீர் வரத்து 75 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இன்னும் ஒரிரு தினங்களில் மேட்டூரின் நீர்மட்டம் 90 அடியை தாண்டிவிடும் நிலை உருவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரிக்கும் என்பது உறுதியாகிவிட்டது.

சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, முற்றிலும் பொய்த்துவிட்டது. அதன் காரணமாக திருச்சி, தஞ்சை, அரியலூர், நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. குடிநீர் தட்டுபாடும் நிலவுகிறது. டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் அநேகமாக அனைத்து கிராமங்களில் உள்ள பெரிய, சிறிய வாய்க்கால்களில் ஓடுகிறது. காவிரி நீர் கிடைக்கப் பெறாததால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. எனவே தமிழக முதல்வர் மேட்டூரின் நீர் இருப்பு அளவை கருத்தில் கொண்டு உடனடியாக நீரை திறக்க உத்தரவிட வேண்டும். நீரை திறந்துவிட்டால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயிகள் பம்பு செட்டு பாசன செய்ய வாய்ப்பாக இருக்கும். முதலில் 10 ஆயிரம் கனஅடியும், பின்னர் படிபடியாக 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்தால் அந்த நீர் கடை, மடை பகுதி வரை சென்றடையும். தற்போது ஒருபோக சம்பா சாகுபடி விதைவிட இதுவே சரியான தருணமாகும். மேலும் டெல்டா விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆடிப்பெருக்கை மகிழ்ச்சியாக கொண்டாடி பல வருடங்கள் ஆகிறது. மேட்டூரிலிருந்து உடனடியாக நீர் திறந்துவிடப்பட்டால் பொதுமக்களுக்கு, விவசாயிகளும் ஆடிப்பெருக்கை மகிழ்ச்சியாக கொண்டாட வாய்ப்பாக இருக்கும் என கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →