வேளாங்கன்னி கடலில் மூழ்கி 3 பேர் பலி
வேளாங்கண்ணி கடலில் குளித்த சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பேருந்து மூலம் வேளாங்கன்னிக்கு
வேளாங்கண்ணி கடலில் குளித்த சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பேருந்து மூலம் வேளாங்கன்னிக்கு சுற்றுலா வந்தனர்.இதில் பெரும்பாலானோர் இன்று பிற்பகல் வேளாங்கன்னி கடலில் குளித்தனர்.அப்போது சரவணன்(36) ,தங்கராஜ்(37), பூபதி(20) ஆகிய மூவரும் கடலில் மூழ்கினர்.உடனிருந்தவர்கள் மற்றும் மீனவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரங்களுக்கு பிறகு கடற்கரையில் மூவர் உடலும் கரை ஒதுங்கியது.இது குறித்து கிழையூர் கடற்கரை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.