முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் போக்குவரத்து துறை கண்காணிப்பாளர் சாவு

சிதம்பரம் அருகே உள்ள பிரியதர்சினிநகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (51). மயிலாடுதுறை வட்டார போக்குவரத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:00 PM
பகிர்:

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போக்குவரத்துறை அலுவலக கண்காணிப்பாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் இறந்தார்.

சிதம்பரம் அருகே உள்ள பிரியதர்சினிநகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (51). மயிலாடுதுறை வட்டார போக்குவரத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு சிதம்பரம் அருகே புத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். கவலைக்கிடமான நிலையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சண்முகசுந்தரம் இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →