முகப்பு
தற்போதைய செய்திகள்

பஸ்நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்

சிதம்பரம் மேலவீதி பஸ்நிறுத்தத்தின் உள்ளே உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:01 PM
பகிர்:

சிதம்பரம் மேலவீதி பஸ்நிறுத்தத்தின் உள்ளே உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர்கள் அமைப்புகள் சமூகஆர்வலர்கள் கோரிக்கைகள் மனு அளித்து போராட்டங்கள் நடத்தியும் உள்ளனர். ஆனால் முதல்வரின் தனிப்பிரிவிற்கு கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மேற்கண்ட கடை எவ்வித இடையூறும் இல்லை என தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு லோக் ஜன சக்தி மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மேற்கண்ட டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என மனு அனுப்பியிருந்தார். ஆனால் முதல்வர் தனிப்பிரவிலிருந்து வந்துள்ள மனுகுறித்து கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளரும், துணை ஆட்சியருமான என்.மகேஸ்வரன் முதல்வர் தனிப்பிரிவு தனி அலுவலருக்கு 26-7-2013 தேதியிட்டு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் (கடித எண்: ஆர்.வி.6/-2612-2013) மேற்கண்ட மதுபானக்கடை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தொடர்ந்து செயல்பட்டு வகுகிறது. இதுவரை எவ்வித ஆட்சேபனையும் வரப்பெறவில்லை. எனவே மதுபானக்கடையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற பதிலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லோக் ஜனசக்தி மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர் தெரிவித்ததாவது: கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முதல்வரின் தனிப்பிரிவிற்கு தவறான தகவலை தெரிவித்துள்ளார். மேற்கண்ட டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தியுள்ளது. வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியர், உதவிஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர். கடந்த ஜன 4ந்தேதி தமிழக மாணவர் முன்னணி மேலவீதி பஸ்நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டு போட்டு பூட்டும் போராட்டம் அறிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது நகர போலீஸாரால் தடியடி நடத்தப்பட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் மேலவீதி பஸ்நிறுத்த மதுபானக்கடையினால் மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை, யாரிடமும் ஆட்சேபனை வரப்பெறவில்லை என டாஸ்மாக் மேலாளர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு தவறான தகவல் அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் ஆர்.பன்னீர்.

முழு கட்டுரையைப் படிக்க →