அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
சித்தணி கிராமத்தை சேர்ந்த அய்யம்பெருமான் என்பவரின் மகன் குமார்(40).இவர் இருசக்கர வாகனத்தில் சித்தணியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.அப்போது
திண்டிவனம் அடுத்த தென்பசியார் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சித்தணி கிராமத்தை சேர்ந்த அய்யம்பெருமான் என்பவரின் மகன் குமார்(40).இவர் இருசக்கர வாகனத்தில் சித்தணியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.அப்போது தென்பசியார் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து அவரது உறவினர் சிவக்குமார் கொடுத்த புகாரின் போரில் மயிலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.