முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கப்பாண்டியன் நினைவு நாள் நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் மு.க.அழகிரி பங்கேற்பு

தி.மு.க கழகத்தின் மாநில நெசவாளர் அணித் தலைவரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசின் தந்தையாரும் முன்னாள் அமைச்சருமான வே. தங்கப்பாண்டியன்

Updated On : 31 ஜூலை, 2013 at 3:43 PM
பகிர்:

விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவு நாள் நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் மு.க.அழகிரி பங்கேற்று மரியாதை செய்தார். 

தி.மு.க கழகத்தின் மாநில நெசவாளர் அணித் தலைவரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசின் தந்தையாரும் முன்னாள் அமைச்சருமான வே. தங்கப்பாண்டியன் நினைவு நாள் நிகழ்ச்சி மல்லாங்கிணற்றில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் மு.க.அழகிரி பங்கேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். அப்போது உடன் முன்னாள் துணை மேயர் மன்னன், மதுரை மாநகர துணைச் செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.

அதற்கு முன்னதாக காலையில் விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், மாநில நெசவாளர் அணிச் செயலாளர் மற்றும் திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து  பின்னர் தங்கப்பாண்டியன் நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், இதில், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலன், மதுரை மாநகர செயலாளர் கோ.தளபதி மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.