முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே கார் விபத்து: 2 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊரைச் சேர்ந்த 4 பேர் ஒரு இண்டிகா காரில் சாத்தான்குளம்- முதலூர் கிராமத்துக்கு சாமி கும்பிடச்

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

விருதுநகர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 2 பேர் பலியாயினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊரைச் சேர்ந்த 4 பேர் ஒரு இண்டிகா காரில் சாத்தான்குளம்- முதலூர் கிராமத்துக்கு சாமி கும்பிடச் சென்றனர். நேற்று இரவு தங்கள் ஊரில் இருந்து கிளம்பி இன்று காலை 7.30க்கு விருதுநகர் மாவட்டம் மரனூத்து பட்டம்புதூர் இடையே உள்ள பாலத்தின் அருகே வந்த போது, கார் ஓட்டுநர் சற்று கண் அசந்தாராம்.

அப்போது கார் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், அந்தோணிராஜ்(45), உஷாராணி இருவரும் உயிரிழந்தனர். இவர்களின் மகன், மகள், ஓட்டுநர் ஜெகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து

Advertisement

வத்தகாரப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.