முகப்பு
தற்போதைய செய்திகள்

மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்!

சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் பொறியாளர் அ.கலியபெருமாள், கோ.நீதிவளவன், ரா.காவியச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் ஆ.அதியமான், பி.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:00 PM
பகிர்:

கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நெடுஞ்செழியனுக்கு கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் பொறியாளர் அ.கலியபெருமாள், கோ.நீதிவளவன், ரா.காவியச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் ஆ.அதியமான், பி.குறிஞ்சிவளவன், து.வீராசாமி, பால.அறவாழி, அ.அரசு, செ.சக்கரவர்த்தி, மு.வெற்றிவேந்தன், நகர நிர்வாகி க.ஆதிமூலம், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை ஒருமையில் அவதூறாக பேசிய காங்கிரஸ் பிரமுகர் கே.ஐ.மணிரத்தினத்தை வன்மையாக கண்டிப்பது; விடுதலைச்சிறுததைகள் கட்சியினர் வன்முறை கும்பல், விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் அண்ணாதுரை தற்கொலை செய்து கொண்டார். பணம் பரிப்பதற்காக கொலை வழக்காக சித்தரிக்கின்றனர் என அறிக்கை வெளியிட்ட கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நெடுஞ்செழியனை வன்மையாக கண்டிப்பது; காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு வன்மையாக கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →