முகப்பு
தற்போதைய செய்திகள்

மானாமதுரை அருகே தீயில் கருகி கணவன், மனைவி பலி

உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மானாமதுரை நகர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:01 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தீயில் கருகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவன், மனைவி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன்(28( இவருக்கும் சோபியா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று கீழப்பசலை கிராமத்தில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இந் நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் சோபியா சமையல் செய்து கொண்டிருந்தபோது அவரது உடம்பில் தீப்பற்றியது. இவரது அலறல் சத்தம் கேட்டு கணவர் கர்ணன் சோபியாவை காப்பாற்றச் சென்றார். அப்போது இவர் மீதும் தீப்பிடித்தது. உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மானாமதுரை நகர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.