தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி கட்டப்படும் வீடுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்ககூடாது: கிராம ஊராட்சிகளுக்கு உத்தரவு

கிராம ஊராட்சிகளில் வீடு கட்டுவோர், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில்,திட்ட அனுமதி பெறாமல் வீடு கட்டி விடுகின்றனர். அதன் பிறகு மின் இணைப்பு பெறுகின்றனர். இதை காட்டி, குடிநீர் இணைப்பு,அரசு மானியத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு,கிராம ஊராட்சிகளுக்கு

VASUDEVAN.K

கிராமங்களில் அனுமதியின்றி கட்டப்படும் வீடுகளுக்கு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எந்த வசதியும் ஊராட்சி சார்பில் செய்து தரக்கூடாது என ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அலுவலகம், கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில்:-

கிராம ஊராட்சிகளில் வீடு கட்டுவோர், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில்,திட்ட அனுமதி பெறாமல் வீடு கட்டி விடுகின்றனர். அதன் பிறகு மின் இணைப்பு பெறுகின்றனர். இதை காட்டி, குடிநீர் இணைப்பு,அரசு மானியத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு,கிராம ஊராட்சிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர்.கிராமங்களில், 4000 சதுர அடிக்குள் உள்ள இடத்தில் வீடு கட்டுவோர், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில், பிளான் அப்ரூவல் பெற்று வீடு கட்டவேண்டும்.4000 சதுர அடிக்கு மேல் உள்ள நிலங்களில் வீடு கட்டவோ, வீட்டுமனை பிரித்து விற்க வேண்டும் என்றாலோ, மண்டல நகர் ஊரமைப்பு துறையில் அனுமதி பெற வேண்டும்.

இந்த விதிமுறைகளின்படி, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும், கிராம ஊராட்சி சார்பில் செய்து தரக்கூடாது. இதையும் மீறி செய்து கொடுத்தால்,சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT