சாத்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்து கண்மாய் பகுதியில் வீசிய தாய் மற்றும் கள்ளக்காதலனை ஆலங்குளம் போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(40). இவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகள நாகஜோதி(19). கடந்த மாதம் 26-ம் தேதி திடீரென காணமல் போயுள்ளார். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத காரணத்தால் வெம்பக்கோட்டை போலீஸாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே வெம்பக்கோட்டை அருகே எதிரிக்கோட்டை கண்மாயில் பகுதியில் காயங்களுடன் இளம்பெண் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது நாகஜோதிதான் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, நாகஜோதியின் தாய் முருகேஸ்வரி(35) மீது சந்தேகம் அடைந்த போலீஸார் தீவிரமாக விசாரணை செய்தனர். அப்போது, இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதற்கு இடையூராக அவரது மகள் இருந்துள்ளது. அதனால், இருவரும் சேர்ந்து திட்டமிட்டு அடித்துக் கொன்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக இருவரையும் ஆலங்குளம் போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.