தற்போதைய செய்திகள்

நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல்: ஒருவர் சாவு

பொள்ளாச்சி அருகே மரக்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(34). இவர் மினிலாரியின் உரிமையாளராகவும், ஆட்கள் இல்லாத நேரத்தில் கிளீனராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியிலிருந்து திருநெல்வேலிக்கு பனங்கருப்பட்டி மூட்டைகளை மினிலாரியில் ஏற்றிய

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே லாரியின் உரிமையாளர் உயிரிழந்தார்.

பொள்ளாச்சி அருகே மரக்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(34). இவர் மினிலாரியின் உரிமையாளராகவும், ஆட்கள் இல்லாத நேரத்தில் கிளீனராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியிலிருந்து திருநெல்வேலிக்கு பனங்கருப்பட்டி மூட்டைகளை மினிலாரியில் ஏற்றிய நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த பாக்கிரயராஜ் என்பவர் ஓட்டினாராம். அப்போது, விருதுநகருக்கும்-பட்டம்புதூருக்கும் இடையே 4 வழிச்சாலையில் இன்று காலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென லாரி டயர் வெடித்து பழுதானது.

இதையடுத்து, லாரியின் உரிமையாளரும், டிரைவரும் சேர்ந்து டயரை கழற்றி மாட்டும் பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர்.அப்போது சாத்தூரிலிருந்து-பொள்ளாச்சி நோக்கிச் சென்ற டேங்கர் லாரி பின்புறமாக இவர்கள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தார். டிரைவர் பாக்கியராஜ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், காயம் அடைந்தவருக்கும் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

இது தொடர்பாக பாக்கியராஜ் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய லாரி டிரைவர் ஆறுமுகத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT