முகப்பு
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு கொலைமிரட்டல்: டிரைவர் மீது புகார்

விருதுநகர் அருகே குருமூர்த்திநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வலட்சுமி(40). இவர் விருதுநகர்-சிவகாசி சாலையில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இங்கு மிளகாய்பட்டியைச் சேர்ந்த

Updated On : 4 ஜூன், 2013 at 2:59 PM
பகிர்:

விருதுநகர் அருகே தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பெட்ரோல் பங்க் டிரைவர் மீது உரிமையாளர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

விருதுநகர் அருகே குருமூர்த்திநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வலட்சுமி(40). இவர் விருதுநகர்-சிவகாசி சாலையில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இங்கு மிளகாய்பட்டியைச் சேர்ந்த உறவினரான அழகர்சாமி என்பவர் டேங்கர் லாரி டிரைவராக இருந்து வருகிறார்.இவரின் நடவடிக்கை பிடிக்காத காரணத்தால் திடீரென வேலையைவிட்டு நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் பெட்ரோல் பங்கின் உரிமையாளர் செல்வலட்சுமியின் கணவர் பேச்சைக் கேட்டு தான் திடீரென வேலையை விட்டு நீக்கியதாக கண்டபடி பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.எனவே இது குறித்து செல்வலட்சுமி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் டிரைவர் அழகர்சாமி மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.