தற்போதைய செய்திகள்

அரசு அனுமதியின்றி மணல் கடத்தியதாக ஒருவர் கைது 

விருதுநகர் அருகே அர்ச்சனா ஆற்றுப்பகுதியில் இரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி மணல் கடத்திச் செல்வதாகவும், கிராமங்களிலும் வேகமாக டிராக்டரை ஓட்டிச் செல்வதாகவும்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அரசு அனுமதியின்றி மணல் கடத்தியதாக ஒருவரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்ததோடு டிராக்டரையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் அருகே அர்ச்சனா ஆற்றுப்பகுதியில் இரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி மணல் கடத்திச் செல்வதாகவும், கிராமங்களிலும் வேகமாக டிராக்டரை ஓட்டிச் செல்வதாகவும் போலீஸாரிடம் ரகசிய தகவல் அளித்தனர்.இதன் பேரில் வச்சக்காரப்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் முணியான்டி தலைமையில் போலீஸார் நடுவப்பட்டி- வேப்பிலைப்பட்டி கிராமச் சாலையில் இரவு ரோந்து சென்றனர். அப்போது, அச்சாலையில் வந்த டிராக்டர் போலீஸாரை பார்த்ததும் வேகமாக ஓட்டிச் சென்றனர். பின் தொடர்ந்து சென்று சுற்றிவளைத்து பிடித்தனர்.

அதையடுத்து, நடுவப்பட்டியைச் சேர்ந்தவருக்கு சொந்தமான டிராக்டர் என்பதும், அதில் டிரைவராக வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த செல்வம்(34) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவரை கைது செய்ததோடு மணல் ஏற்றிய டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு  கொண்டு வந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT