மகளை காணவில்லை என தந்தை போலீஸில் புகார்!
சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகள் ரேவதி (17). சிதம்பரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்து வரும் இவர் கடந்த ஜூன் 2-ம் தேதி வீட்டிலிருந்து
சிதம்பரம் அருகே மகளை காணவில்லை என தந்தை சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகள் ரேவதி (17). சிதம்பரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்து வரும் இவர் கடந்த ஜூன் 2-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் அவரது தந்தை சக்கரவர்த்தி சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என இன்று புகார் அளித்தார். அதன் பேரில் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.