தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 8-ம் தேதி நடைபெறுகிறது

விருதுநகர் மாவட்டத்தி்ல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு வருகிற 8-ம் தேதி தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற இருப்பதாக

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தி்ல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு வருகிற 8-ம் தேதி தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன் அடிப்படையில் இசை ஆசிரியர்-11, தையல்-138, ஓவியம்-102, உடற்கல்வி-130, கணிப்பொறி-311, வாழ்க்கை கல்வி மற்றும் கட்டடப்பணி ஆசிரியர்-3 என மொத்தம் 695 பேர்கள் வரையில் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 8-ம் தேதி குறிப்பிட்ட இடத்தில் காலை 10-மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை வரையில் நடைபெற இருக்கிறது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்த அனைவரும் தவறாமல் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT