அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வளர்ச்சி பாதையில் திரும்பியுள்ளது: ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றிலேயே முதல் முறையாக மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நேர்மையான முறையில் தமிழகத்தில் 7 முக்கிய நகரங்களில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வளர்ச்சி பாதையில் திரும்பியுள்ளது. இது பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினரின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரா.உதயசந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றிலேயே முதல் முறையாக மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நேர்மையான முறையில் தமிழகத்தில் 7 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது.இந்த தேர்வினை முறையாகவும், பாதுகாப்பாகவும், மருத்துவர்களுடன் ஆம்புலன்ஸ் வசதி மற்றும் போக்குவரத்து வசதி ஆகிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிற்கு பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டு நடவடிக்கை குழு நன்றியையும், பாராட்டினையும் தெரிவிக்கிறது. மேலும் இனிமேல் மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில்தான் அனுமதி சேர்க்கை கிடைக்கும் என்ற உத்திரவாதம் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா எடுத்து வரும் நடவடிக்கை மூலம் நிருபனமாகி உள்ளது என அறிக்கையில் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.