விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் கிணறுகளை தூர்வார நடவடிக்கை
விருதுநகர் நகராட்சிக்கு குடிநீர் ஆதரமாக விளங்கும் ஆணைக்குட்டம் அனையில் போதிய மழையில்லாத நிலையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்வதில்
விருதுநகர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் கிணறுகளில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணியை நகராட்சி தலைவர் மா.சாந்தி அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் நகராட்சிக்கு குடிநீர் ஆதரமாக விளங்கும் ஆணைக்குட்டம் அனையில் போதிய மழையில்லாத நிலையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இந்த அனையின் ஆற்றுப்படுகையில் பெரிய அளவிலான 13 உறை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை சுகாதாரமான குடிநீர் நகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
தற்போது, ஆற்றுப்படுகையில் உள்ள கிணறுகளில் மணல் மேவி காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலையிருந்தது. அதன் அடிப்படையில் உடனே ஆற்றுப்படுகையில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், 6,8 ஆகிய கிணறுகள் மணல் மேவி காணப்படுவது தெரியவந்தது. உடனே நகராட்சியின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டு வறட்சி நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.13 லட்சத்தில் தூர்வாருவதற்கு முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
Advertisement
இப்பகுதியில் நடந்து வரும் பணிகளை நகராட்சி தலைவர் ம.சாந்தி, குடிநீர் திட்ட அலுவலர் பீமராஜ், நகராட்சி உதவி பொறியாளர் தன்ராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் சென்று தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் மணல் அனைத்தையும் அள்ளுமாறும், விரைவில் வேலையை முடிக்குமாறும் நகராட்சி தலைவர் மா.சாந்தி கேட்டுக் கொண்டார்.