முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆட்சியர் மூட உத்தரவிடப்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் உதவிஆட்சியரிடம் முறையீடு!

அங்கீகாரம் பெறாமல் இயங்கியதால் மாவட்ட ஆட்சியரால் மூட உத்தரவிட்ட சிதம்பரம் விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி தொடர்ந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:06 PM
பகிர்:

அங்கீகாரம் பெறாமல் இயங்கியதால் மாவட்ட ஆட்சியரால் மூட உத்தரவிட்ட சிதம்பரம் விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி தொடர்ந்து இயங்கிட அனுமதி வழங்கக் கோரி சிதம்பரம் உதவிஆட்சியரை இன்று சந்தித்து முறையிட்டனர்.

சிதம்பரம் பகுதியில் அங்கீகாரம் பெறமால் இயங்கிய விவேகானந்தா, அன்னீஸ், கெய்சான், கந்தசாமி, ராஜலட்சுமி ஆகிய பள்ளிகளை மூட கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்திரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் சிதம்பரம் மன்னார்குடித்தெருவில் 1983 முதல் இயங்கி வரும் விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் பி.ஜமுனாமேரி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் சிதம்பரம் உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியத்தை சந்தித்து பள்ளிக்கு அனுமதி வழங்கி தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மனு அளித்தனர்.

மனுவில் பளளியில் 138 மாணவர்களும், 111 மாணவியர்களும் பயின்று வருகின்றனர். இதுவரை தொடர்ந்து பள்ளிக்கு அனுமதி பெறப்பட்டு வந்துள்ளது. இந்த ஆண்டு பள்ளிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம். இந்நிலையில் எங்களது பள்ளிக்கு அங்கீகாரம் இல்லை என ஆட்சியர் மூட உத்தரவிட்டுள்ளார். எனவே இந்த ஆண்டு அனுமதி வழங்கி பள்ளி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் பள்ளி தாளாளர் தெரிவித்துள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட உதவிஆட்சியர் பதிலளிக்கையில் 'பள்ளி நிர்வாகத்தினர் முன்கூட்டியே முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். பள்ளி நடத்துவதற்கு உண்டான வசதிகள் இல்லாததால் அங்கீகாரம் வழங்கபடவில்லை. எனவே பள்ளியில் பயிலும் மாணவர்கள் தொடர்ந்து பயின்றிட மாவட்டக்கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திங்கள்கிழமை பள்ளிக்கு வந்து அருகாமையில் உள்ள வேறு பள்ளியில் மாணவர்களை சேர்த்து தொடர்ந்து கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிவித்தார். இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →