முகப்பு
தற்போதைய செய்திகள்

இழந்த பெருமையை பெற்று வருகிறது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்விற்கு மாணவ, மாணவியர்கள் சிரமமின்றி அண்ணாமலைநகர் வந்து செல்ல போக்குவரத்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:06 PM
பகிர்:

பல்கலைக்கழக நிர்வாகியின் சீரிய நடவடிக்கையால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இழந்த பெருமையை மீண்டும் பெற்று வருகிறது என மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இயக்கத் தலைவர் முனைவர் அ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்விற்கு மாணவ, மாணவியர்கள் சிரமமின்றி அண்ணாமலைநகர் வந்து செல்ல போக்குவரத்து ஏற்பாடு, பாதுகாப்பு ஏற்பாடு, தேர்வு அறைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. இது மாணவ, மாணவியர்களுக்கு மட்டும அல்லாமல் பெற்றோர்களுக்கும் ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனுமதி சேர்க்கையும் நியாயமான முறையில் நடக்கும் என்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இழந்த பெருமையை பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமான பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிற்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. அவரது நிர்வாகத்தில் அனைத்து துறைகளும் பல்கலை இழந்த பெருமையை முற்றிலுமாக பெறும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது என அறிக்கையில் முனைவர் அ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →