மதுரையில் செங்கல் சூளை தொழிலாளியைக் கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல் சூளை அதிபரை போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
தேனி மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவர், மதுரையில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்தார். இவர் முன்பணமாக ரூ.60 ஆயிரம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அங்கிருந்து விலகி, மானாமதுரையில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதை அடுத்து, நடராஜன் உள்ளிட்டோர் மானாமதுரைக்குச் சென்று அவரைக் கடத்தி வந்து பணம் தருமாறு மிரட்டினராம்.
இது தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில், மதுரை போலீஸார் வழக்கு பதிவு செய்து, குமார் அர்ஜுனன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். நடராஜனைத் தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.